+நானும் ஒரு புலவன்+
தமிழ் கற்பனை விதைத்து
கவிதை அறுவடை செய்வதால்
நானும் ஒரு உழவன்!
சில நேரம்
கற்பனைக்கு ஓய்வு தந்து
சிந்தனைக்கு நேரம் தந்து
புரியாத உளரல் மொழி
தனியாக தினம் பேசி
தமிழ் குச்சி பிடித்த படி
தத்தி தத்தி தடம்பதிப்பதால்
நானும் ஒரு கிழவன்!
சில நேரம் தனியாய்
சில நேரம் நட்சத்திர தோழிகளுடன்
கற்பனை வானில் சுற்றுவதால்
நானும் ஒரு நிலவன்!
புல்லுக்கும் பூவுக்கும்
வண்டுக்கும் நிலவுக்கும்
உழவுக்கும் பலவுக்கும்
பாட்டுக்கட்டி பாடுவதால்
நானும் ஒரு புலவன்!