பிச்சை

ஒவ்வொரு நாளையும் இறைவனிடம்
பக்தியால் பிச்சை கேட்கிறோம்

காதல் என்ற பெயரால் பிடித்தவரிடம்
அன்பை பிச்சை கேட்கிறோம்

உரிமை என்ற பெயரால் துணையிடம்
காமத்தைப் பிச்சை கேட்கிறோம்

ஆழ்ந்த உறக்கத்தை ஒவ்வொரு இரவிடம்
பிச்சை கேட்கிறோம்

புதிய விடியலை ஒவ்வொரு உறக்கத்திடம்
பிச்சை கேட்கிறோம்

நல்ல மழையை ஆகாயத்திடம்
பிச்சை கேட்கிறோம்

மிதமான வெய்யில்லை சூரியனிடம்
பிச்சை கேட்கிறோம்

தென்றல் காற்றினை மரத்தினிடம்
பிச்சை கேட்கிறோம்

பிச்சை என்பது மனிதனின் இயற்கை
சில இடத்தில் அது கௌரவமாகிரது
சில இடத்தில் அது இழிவுப்படுத்தப்படுகிறது
சில இடத்தில் அது அனுதாபமாகிறது

ஒரு நாள் மனிதன் பிச்சை எடுப்பதை
மறக்கின்றான் அன்று அவன் மனிதனல்ல
பிணம் !

எழுதியவர் : ப. கோபாலகிருஷ்ணன் (25-Sep-14, 11:00 am)
Tanglish : pitchai
பார்வை : 110

மேலே