மீதமிருப்பவை

அறிமுகமில்லா முகங்களோடும்,
புரிந்திடாத பாஷைகளோடும்,
பரிட்ஷமில்லா சம்பாசனைகளோடும்,
பாவப்பட்ட பார்வைகளோடும்,
தீர்ந்திடாத தேவைகளோடும்,
ஓய்ந்திராத தேடல்களோடும்,
அறிந்திராத திசைகளோடும்,
அளவில்லா பயணங்களோடும்,
பழகிப்போன பசிகளோடும்,
உயிருடன் இருக்க நேர்கையில்
தனிமையின் வெம்மை தணித்திட
கதிரவனை கண்களில்
நிரப்பி
கொள்கிறேன்..
அவன் கரங்களின் பிடியில்
எங்கோ ஒரு மூலையில்
என்னை நினைவில் சுமந்தபடி
நீயாவது
வாழ்ந்து கொண்டிருப்பாய்
என்ற
நம்பிக்கையில்..!!

எழுதியவர் : கல்கிஷ் (26-Sep-14, 6:27 pm)
பார்வை : 334

மேலே