என்னத்த சொல்ல உள்ளதை சொன்னேன்

பெண்ணுக்கு பெண்ணே விஷம்
புன்னகை இதழ்களும் வேஷம்
கண்ணுக்குள்ளே போடும் கோஷம்
கண்ணீரெனும் பாசம் !!

உள்ளத்தில் மறைத்து
உதட்டில் சிரித்து
கண்களை வளைத்து
கண்ணி விரித்து
காதலெனும் பொய் படைத்து
ஆடவரெல்லாம் பைத்தியமாய்...!!

அரைஞான் கயிறும் மிஞ்சாது
அவளை அழகுறச் செய்கையில்
ஆடவரை அழுதிடச் செய்கையில்
அவளாசைக்கு கோடி காசும் போதாது !!

அணியும் ஆபரணமும்
அழகு ஆடையும் அரை டன் இருந்தாலும்
அவளாசை அடங்காது
அடுத்தவர் உடுத்திட அவள் கண்
அதன் மேல் மேயுமே !!

அனாவாசியமென்று அவள் எண்ணினாலும்
அடுத்தப் பெண்ணின் வாயைமூட
அவசியமாகி போகிறதே
அந்தோ பரிதாபம் ஆடவன் தானே !!

எழுதியவர் : கனகரத்தினம் (28-Sep-14, 5:46 am)
பார்வை : 185

மேலே