காரணமில்லா காதல் - இராஜ்குமார்

காரணமில்லா காதல்
=====================

எனதாசை என ஏதுமில்லை
நிறைவேற்றனும் உனதாசையை

இதுவே ஆசையென ...

உனது விழி காண
எனது விழியை
பாதையில் படர வைத்தேன்

அருவி அருகில்
நான் அமர்ந்தேன் - நீ
நிச்சயம் வருவாயென

மணித்துளிகள் மயங்கி
கட கடவென கடந்தது

கால்கள் அயர்ந்தும்
எனது இமைகள்
கருவிழி மூட மறுக்குது

இன்னும் உந்தன்
கருவிழி காணாத காரணத்தால் ..

சட்டென ..

சில்லென்று ஒருதுளி
அருவியில் இருந்து அழகாய்

எனது இமை நனைத்து
இதம் கொடுத்தது ...

அந்த ஒற்றை மணித்துளியில்
நான் கண்டேன் உன்னுருவம் ..

ஆனந்தத்தின் அடிவாரம் அதுவே
உற்சாகத்தின் உச்சம் அதுவே

மங்கை உனைத் தொடப் போக
மாயை உணர்ந்தது கைகள்

ஒரு துளியில் நனைத்த தேகம்
திசை மறந்து கண்ட கனவே அது ..

எந்த துளியிலும் நனையாமல்
இப்போது காணும் காட்சி

தூர தொலைவில்
உந்தன் உருவம் ...

நான் என்ன செய்ய ..

வழியில் வழித்துணை
இல்லாமல் போனாலும் ..

எனைப் போலவே

காத்திருக்கும் நொடிகளும்
காரணமின்றியே காதலை
காதல் செய்கின்றன ..

- இராஜ்குமார்

நாள் : 17 - 11- 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Oct-14, 3:22 pm)
பார்வை : 130

மேலே