அந்தரங்கச்சிதைஒரு கற்பழிக்கப்பட்ட பெண்ணின் சாபம்
ஓடுக்கி எழுதியே,
ஒங்கி இருக்கு !
ஒப்பாரிகளே ஒடுக்கு
குழிகளாய் இருக்கு!
ஒய்யாரமாய் அலப்பறைகள்"
எதற்க்கு......?
"மரித்துப்போன
மண்கூடுகளே"
மல்லாக்க கிடக்கு....!!!
அதினுள்
மயிரை நுழைக்க
"மனிதமுயற்ச்சிகள்"
எதற்க்கு? (ஆபாச மோகம்)
"பாரதிக்கருவாடே
நாரிக்கிடக்கு.....!!!
பாரதக்கல்லுக்கு
மல்லிகை எதற்க்கு?
"மூக்கு உடைந்த சாமி
மூலியாய் இருக்கு.....!!!
கோயிலில் முக்கால்கடவுளே"
முண்டமாய் வீற்றிருக்கு.....!!!
பெண்மையின்முந்தியைக்
காப்பாற்றும்
முழுக்கடவுள்" எங்கிருக்கு.....?
தாய்மணிக்கொடி
கோலறியே,
காவிrமணிக்கொடியாய்
இருக்கு.....!!!
காவிச்செண்டுகளில்
கலவி வண்டுகளாய்
ஞானிப்பெண்டுகள்
ஞாதியத்துக்கிடக்கு....
ஆலயத்தின் அம்மணக்கல்லுக்கு
ஆடை எதற்கு?
வெட்டி ஒட்டிய
கைகளாய் இருக்கு
"இலக்கியப்பெண்மையின்
இலக்கண மார்பு.....
ஒட்டி ய மார்புதனை
இரு கூறாய் வெட்டி
விந்தகசதையிடம்
விலைக்கு போகும்
அந்தரங்கச்சிதையில்
வெந்து கிடக்கு
அழகுபெண்ணினம்...
தன் மானம் காக்க
கேட்டிருக்கு கங்கை., இன்று
கழுத்தொடிந்து
கிடக்கு....!!!
பாவம் சுமக்கும்
நங்கையே....
நீ இன்னொரு பாவமாய்
எதற்க்கு.....?
சுமக்கும் பாரமாய்
எதற்க்கு....?