போலி சாமியாரும் காலி பாக்கெட்டும்

பாவி பயலுக பாசாங்கு பண்ணிநம்ம
ஆவி பறிக்கும் அரைகுறைக -காவி
அணிஞ்சு,வரங்கொடுக்கும் ஆசைவார்த்த சொல்லி,
பணிஞ்சு குனியவைப் பான்!

வித்தைகாட்டி, சித்தனப்போல் வேசமிடும் வேசிபுள்ள,
பித்தனாக பேயனாக ஆக்கிநம்ம-சுத்தமா
காலியாக்கி காசுவாங்கி காரியஞ் சாதிப்பான்
போலிபய மேல்தீயப் போடு !

எழுதியவர் : அபி (4-Oct-14, 10:46 am)
பார்வை : 146

மேலே