இன்மையின் வன்மை

இன்மையின் வன்மை


அரசியல் நாடகத்தில்
அரங்கேறும் காட்சிகளை
கவியாக்கித் தரச்சொன்னால்
கம்பனும் இளங்கோவும்
கையறு நிலைபாடி
கதிகலங்கி ஒதுங்கிடுவார்.


நாளுமொரு காட்சி
நம்கண்கள் பார்க்க
காட்சிக்குள் காட்சிகள்
குழப்பத்தைக் கொடுக்க
என்னாகும் என்று
எளியவர்க்குப் புரியாது.

தொலைக் காட்சித்
தொடர் புதிர்போல்
காத்திருக்க வேண்டும்
அடுத்தநாள் வருகின்ற
இன்னொரு புதிருக்கு
ஆவலை அடைக்கிவைத்து.


இளிச்சவாய் மனிதருக்கே
புதிர்களின் சதிராட்டம்
உணர்ச்சி வலைகளில்.
அரசியல் கூறுகளை
நுணுக்கமாய் ஆய்ந்தவர்க்கு
இன்மைதான் எல்லாமே.




இன்மை = இல்லாமை வன்மை = வலிமை

எழுதியவர் : மலர் (5-Oct-14, 2:57 pm)
பார்வை : 232

மேலே