எந்திரக்கரையான்கள்-மின்சாரம் இல்லா உலகம் எப்படி யிருக்கும்ஒரு கற்பனைங்க

பாவம்!
எந்திரக் கரையான்களின்
இருண்ட வாழ்க்கை!

சிம்னி விளக்குகள்,
ரோபாட்டுகளின்
மயானக்கரையில்
நினைவு நாள்
தரிசிக்கும்!

ஹைட்ரோ கார்பன்களின்
உயிரிழப்பால்,
குளிர்சாதனப்பெட்டிக்கு
ஐசியு(ICU) அறையில்
அவசரசிகிச்சை!

வானொலிப்பெட்டிகள்
குற்றவியல் மன்றத்தில்
மறுவாழ்வு கேட்டு
மன்றாடும்!

மைக்ரோவேவ் ஓவன்
மைனாக்கூடுகளின்
கருவறைப் பெட்டியாகும்..

காயிலாங்கடையில்
கணிணிக்கூடுகள்!
கட்டுப்பாட்டு.அறைகளில்
சிலந்திக்கூடுகள்!

வௌவாலின்மீயொலி
கருவிக்குள்,
பின்லேடனின் புகைப்படம்!
அதிர்ச்சியில் ரேடார் அலைகளின்
தோப்புக்கரணம்!

இனி
ஏ.சி.ஷோரூம்களில்
"அம்மிக்கல்
விற்பனை"
அதுவும் டாலரில்!...

உலக்கையும் உரலும்
செயல்முறை புத்தகத்தோடு
கண்ணாடிக்கூண்டில்!

ஆட்டுக்கல்
பயிற்சி மையத்தில்,
கோப்புக்காட்சி!
சர்க்கரைவியாதிக்கு
கொலை மிரட்டல்!

செல்போன்கோபுர தட்டுகளின்,
உண்ணா விரதத்தில்வெற்றி!
ஓட்டை ஒடசல்
ஈயம்
பித்தளைகளுக்கு
இட ஒதுக்கீடு!

செல்போன்
பேட்டரியில்,
பணையக்கைதியாய்
அஞ்சல் அட்டைகள்..

கடுதாசிகளின் கனத்த
எடையுடன் தபால் பெட்டிகள்!
கபால முட்டையி லிருந்து
வெடித்து வரும் இனி
தமிழ் எழுத்துகள...

போஸ்ட் மரக்கம்பத்தில்
மாமனின்
காதல் கடிதம் பார்த்து
காத்திருக்கும் அறுக்கானி மகள்!

ஆயிரம்விளக்கு
பகுதியில்
தபால்காரனின் ஊடுருவல்!
மின்னஞ்சல் உழவாளியின்
மிரட்டல் எச்சரிக்கை!

தெருவிளக்குகளுக்கு
கருப்புக்கண்ணாடி
ஸ்டைல்.....
இது மந்திரிகளின்
இரகசிய முடிவு!

எந்திரக் கரையான்களின்
இருண்ட வாசலில்...
மின்மினிபூச்சிகளின்
கருணை.விளக்குகள்!...

புதியன கழியும்
பழையன புகும்
பழமோழியும்
மாறும்!..

எழுதியவர் : ருத்ரா மறுபதிவு (9-Oct-14, 6:55 pm)
பார்வை : 104

மேலே