பிரிவின் துயரம்
மறந்தும் மறந்துவிடக்கூடாது என
எக்கணமும் நினைத்தேன்...
மறந்தாக வேண்டும் என்பதற்காக
எக்கணமும் நினைக்கிறேன் !!
கனவுகளில் உன் நினைவுகளை
தைத்து வாழ்ந்தவன்..
நினைவில் கூட உன் கனவுகளை மட்டுமே
வைத்து வாழ்கிறேன் !!
என் கண்களை திருடிவிட்டாய்
காதலித்தேன் பார்வையற்று..
கண்ணீரையும் திருடிவிட்டாய்
அழுகிறேன் கண்ணில் வேர்வையற்று !!
அன்று அருகினில்
நீயெல்லாம் என் கவிதையானாய்...
இன்று தொலைவினில்
என் கவிதைகளெல்லாம் நீயாகிறாய் !!
நீ இல்லாததொரு நிகழ்காலம்..
அதில் என்ன வருங்காலம்..
எனக்கு என்ன எதிர்காலம்... இனி
என்றும் அது உயிரற்ற இறந்தகாலம் !!
பிரிவின் துயரம்...புரியவைக்க
இல்லையொரு Theorem !!