மழலை மூச்சு

விண்மீன்கள் விலைக்குக்கிடைக்குமா?
என் கண்மணி அழுதுகொண்டிருக்கிறாள்,
அவற்றை மொட்டைமாடியில் அடுக்கச்சொல்லி !...
வழிதெரியாமல் விழி பிதுங்குகிறேன்,
யாரேனும் உதவுங்கள் !
மனம் ஒடிந்து உயிர் ஓய்ந்துவிடும்போல எனக்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Oct-14, 7:54 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 83

மேலே