தரை தேவதையாய் நீ அமர்ந்திருப்பதனால்

வண்ண வண்ணமாய்
வகை வகையாய்
வாசப்பூக்கள் வரிசையினில்
வடிவான வடிவங்களில்
வடித்துவைத்திடவுமில்லை

நிலாமகளின் ஹச்சினில்
தெரித்திட்ட
எச்சிற் சிதறல்களாய்
லட்ச கணக்கில் லட்சணமாய்
எழில் நட்சத்திரங்களும்
அணி அணியாய்
அலங்கரிக்கப்படவில்லை

அதிநவீன முப்பரிமான
ஒளிக்கதிர் வீச்சின்
அதி ஆடம்பர ஆர்பரிப்பும்
அமைத்திருக்கப்படவில்லை

அதிசுகந்த மணம்கொண்டு
மணப்போர் தம் மனதுடன்
மதியையும் மொத்தமாய்
மயக்கிடும் அத்தரின்
மணமதுவும் முழுதாய்
மணந்திடவுமில்லை

சற்றே உயரப்படுத்திடப்பட்ட
சுற்றியும் சுற்று சுவரில்லா
மொட்டை மேடைதான்
எனினும்
சொர்கமேடையாய்

ஆங்கே
போடப்பட்டிருக்கும்
ஒற்றை நெகிழி
நாற்காலியினில்
தரை தேவதையாய்
நீ அமர்ந்திருப்பதனால் .....

எழுதியவர் : ஆசை அஜீத் (14-Oct-14, 10:11 pm)
பார்வை : 95

மேலே