மனிதமில்லாத மனிதன்

கோபம் ,பேராசை , ஆணவம் , அகங்காரம்
பொறாமை , பொய் , அநீதி , சூழ்ச்சி
இவைகளெல்லாம்
பெருமளவு மனிதனின் குணங்களாய்.............

அன்பு ,பண்பு , கருணை ,கனிவு ,
தர்மம் ,பணிவு ,நன்றி
எங்கோ ஒருசில
மனிதர்களின் குணங்களாய் ...........

மனிதாபிமானம் மனசாட்சி
எல்லாம் மண்ணில் புதைந்து
காலங்கள் பலவாகின்றன ...........

உழைப்பை நம்பாத
உதாசினவாதிகளின் ஆட்சியில்
ஊழல்களுக்கு பஞ்சமில்லை ..........

நிறத்தை மாற்றும் பச்சொந்திபோல
குணத்தை மாற்றும்
கயவர்கள்தான் அதிகம் ............

குற்றவாளிகளுக்குதான்
கொடிகள் சொந்தமாகின்றன
கோடிகள் சொத்தாகின்றன
நிரபராதிகள் நிராயுதபானிகலாகவே ..........

ஏமாற்ற தெரியாதவர்களுக்கு
ஏற்ப்பு இல்லாத உலகம்
இதயம் இல்லாதவர்களுக்கு
இனிதான உலகம் ...........

அடுத்தவரின் கண்ணீரில்
ஆனந்த குளியலிடும்
அற்ப மனிதர்களுக்கு
இங்கே பஞ்சமில்லை ........

உயிர்களை பலியாக்கி
உடமைகள் தனதாக்கி
சுயநலம் கொண்டோரின்
சொர்க்கமே இவ்வுலகம் ...........

நல்லவர் தீயவராய்
தீயவர் நல்லவராய்
கண்கட்டி உலகினிலே
காட்சிகள் அரங்கேறும் ...........

இறைக்கு துரத்தும் புலியும்
இறப்பை தவிர்க்கும் மானுமாய்
மனிதரில் இரண்டு பரிமாணங்கள் .........

உயிர்களை பலியாக்கி
இறைச்சியை இரையாக்கும் மனிதர்க்கு
மனிதனின் உணர்வுகளை பலியாக்குவது
எப்படி பெரிதாய் தெரியும் .........

ஆகமொத்தத்தில்
மனிதனாய் பிறந்தும்
மனிதமில்லாமலேயே வாழ்கிறான்
மனிதன் ............

எழுதியவர் : வினாயகமுருகன் (16-Oct-14, 8:20 am)
பார்வை : 263

மேலே