தமிழே அமுதே நினைத்தால் இனிதே

கண்ணான கவிதைக்கு-என்
பென்னாலே மை தீட்டி
மண்ணான உலகத்துள்
பெண்ணான தமிழே !

பொன்னான உன் இதழில்
கண்ணாலே அமுத தேன் பருகி
புண்ணான இதயத்துள் வைத்து
பூசிப்பேன் வா பெண்ணே ...!

வறுமையிலும் செம்மை
வாசித்த எண்ணங்கள் உண்மை
வண்ணங்கள் மாறி நின்றாய்
வான்சிறப்பு பெருமழையே ...!

உலகம் உய்ய பொதுமறை தந்து
உன் மக்கள் இகழ
உலகத்துள் செம்மொழியான பெண்ணே !
உன்னை கந்தர்வம் கொண்டேன் !

எண்ணாலும் எழுத்தாலும்
தமிழ் பெண்ணானாய் நீ
முதுமறை கண்ட முதல் பெண்ணே !
முப்பால் தந்தாய் உனை
தப்பாய் உரைத்தவர்க்கும்....!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை !

எழுதியவர் : கனகரத்தினம் (19-Oct-14, 12:40 am)
பார்வை : 152

மேலே