தமிழ் மகளே ஏற்றுக்கொள்

[முன் குறிப்பு: தோழர் அபி அவர்களின் "ஏசு திருப்புகழ்" கவிதைக்கு பின்னூட்டமாய் எழுதிய கவிதை...]

என்னைக் கவியாக்கும்
------- இனிய தமிழ் மகளே
உண்மை சொன்னால் என்
-------உணர்வும் நீதானே

உலக வரலாற்றில்
------- உச்சிவரை சென்று
திலகம் இட்டதிருக்
-------குறளும் நீதானே

சத்தச் சகதிக்குள்
-------சங்கமித்து நின்றாலும்
நித்தம் நீசெல்லும்
------- நதியில் நான் குளிக்கின்றேன்

சுத்த தமிழ் சொல்லை
------- சிறு நாவால் உச்சரித்து
பித்தன் உன் பாதத்தில்
------- பாட்டு மழைத் தெளிக்கின்றேன்

என்நாவில் சுடரேற்றி
------- எனைப் பேச வைத்தவளே
உன்மடியில் இடங்கேட்டு
------- உயிர்க்கசிந்து நிற்கின்றேன்

மண்ணோடு மண்ணாகி
------- மறைந்தாலும் நானுந்தன்
கண்முன்னே கவிபாட
------- வரமொன்று கேட்கின்றேன்

எல்லை இல்லாத
------- ஆனந்தம் கொண்டாலும்
பிள்ளைப் பயத்தோடு
------- பேசுகிறேன் கேட்டுக்கொள்

காலத்தின் சிறைக்குள்ளே
------- கைதியென வாழ்ந்தாலும்
பாலகன் எழுதுகிறேன்
------- பரிவோடு ஏற்றுக்கொள் !

எழுதியவர் : ஜின்னா (19-Oct-14, 2:48 am)
பார்வை : 176

மேலே