திருமந்திரம்

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே---திருமூலர்


இறைவனுக்கு ஒரு பச்சிலையிட்டு வழிபடுதல் எல்லோர்க்கும் இயலும்;
பசுவுக்குப் புல் கொடுத்தல் எல்லோர்க்கும் இயலும்;
உண்ணும் போது ஒரு கைப்பிடிச் சோறு பிறர்க்குக் கொடுத்தல் எல்லோர்க்கும் இயலும்;
இனிய மொழி பிறரிடம் பேசுதல் எல்லோர்க்கும் இயலும்.

எல்லோராலும் எளிதாகச் செய்யக்கூடிய மேற்சொன்னவற்றைச் செய்தல் இறையை அடைய சிறந்த அறமாகும்

எழுதியவர் : சுடரோன் (20-Oct-14, 10:50 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 245

மேலே