இன்றைய இளைஞன்

அண்ணன்,தம்பி மாமன் மச்சான்
உறவு பரிமாற்றம் முகநூலில்
முகம் தெரியாது பக்கத்து வீட்டில்

இணைய துண்டிப்பு
இதய துண்டிப்பு
பொழுதுபோக்கும் கூகிள்

20_20 ல் வெல்லுமா நம்ம மண்ணு
100_100 மதிப்பெண்ணில் மண்ணு

பாலாபிஷேகம், விசிலும் பறக்கும் சினிமா அரங்கம்
'பாழாய்' போன நடிகர் தான் உலகம்

பார்க்,பீச் பக்கம் ஒதுங்கு
காவிய காதல் காலம் கழிக்கும்
'மணம்' மட்டும் வேண்டாம்

அலைகழிக்கும் அலைபேசி
'பிஞ்சின் நஞ்சுக்கனி '

கல்வி வாங்க கல்லூரி சென்றேன்
மிஞ்ச அறிவு 'போதை ' மட்டுமே

சோத்தைத்தான் தின்கிறீயா? கேட்டார் அப்பா
சோம்பல் முறித்து எழுந்தேன் மணி பதினொன்று

மென்று விழுங்க கஷ்டம் எனக்கு
பழச்சாறு தந்தால் பசி அது அடங்கும்

பிட் எழுதவும் கஷ்டம் எனக்கு
பேப்பர் ஷேசிங் பெஸ்ட் அதுக்கு ......

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (25-Oct-14, 11:35 am)
Tanglish : indraiya ilaignan
பார்வை : 122

மேலே