என் சொர்க்கம் எங்கே போனது

ஆகாய நீர் வீழ்ச்சி
கரை உடைத்து மண்ணில் விழ..
தரணியில் இலை,தழைகள்
வெட்க்கத்தில் தலைகுனிய..
தென்றலோடு சாரல்
மண்வாசம் அள்ளித்தர...
வீட்டு கூரை நீர்
இதமாக தாளமிட...
சின்னச்சிறு கைகள்
முற்றத்துநீரில் கப்பல்விட..
அன்றுகண்ட சொர்க்கத்தின் சாயல்
இன்று கறைபடிந்ததாய் காண்கிறேனே...
மழை மனமின்றி மண்ணில் வந்து
ஏக்கத்தோடு பசுமையை தேடுவதும்..
மண் சுமக்கும் அவலத்தால்
வருந்தியே தென்றல் வீசுவதும்...
பிஞ்சு மனங்கள் மழையை
கொஞ்சிட தவித்து வீட்டினுள் முடங்குவதும்..
மாறியதோ என் சொர்க்கத்தின் சாயல்
மாறியதோ என் சொர்க்கத்தின் சாயல்...
ஐயகோ..மாற்றங்கள் கோடி வந்திடினும்
ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறதே..
என் சொர்க்கத்தை இன்று...
நரகமாய் காண.....
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
என் சொர்க்கத்தை மீட்க என்ன செய்வேன்..???

.......கவிபாரதி......

எழுதியவர் : கவிபாரதி (26-Oct-14, 12:06 am)
பார்வை : 159

மேலே