தேவையும் அடிப்படையும் என் கோணத்தில்

இடை விடா தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கும்-பயன்பாட்டிற்கும்

அளவில்லா அலை பேசிகளின் சேவைகளுக்கும்-பயன்பாட்டிற்கும்

மக்கள் நல பொதுக்கூட்டம் எனும் பெயரில் வாக்குகளை திருடுவதற்கும்

கடமையாய் செய்ய வேண்டியதை அரைகுறையாய் செய்து விட்டு அதை பெரும் சாதனையாய் காட்ட வண்ண விளக்குகளில் அலங்கரிக்கவும்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்கும்

அடுப்படி வேலைகளை இயந்திரம் கொண்டு செய்வதற்கும்
பிறகு உடலை இளைப்பதரக்கு இயந்திரம் கொண்டு வேலை செய்வதற்கும்

இன்னும் எத்தனையோ அடிப்படை அற்ற தேவைகளுக்காக நம் தலைமுறைகளை ஆபத்திலும் கொடிய நோயிலும் ஏன் தலைமுறைகள் அற்ற சூல் நிலையை உருவாக்க , அணுவுலை மின்சாரம் நமக்கு வேண்டுமா?

இயற்கையை வெறுத்தும் அழித்தும் நிம்மதியற்ற நிலையற்ற நிறைவற்ற வாழ்கையை வாழும் நாம் நாகரீகம் நவீணம் எனும் வண்ண சாயங்களை பூசி கொண்டுள்ளோம்.

இன்றைய நாகரீக நவீன உலகத்தில் நாம் வேகமாக ஓடுகின்றோம். நமக்கு எதற்குமே நேரமில்லை குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல,
வயதான பெற்றோர்களின் எண்ணைகளை கேட்பதற்கு . இன்னும் எவ்வளோ கடைமைகளையும் பொறுப்புகளையும் நம்மால் நேரமின்மை எனும் காரணத்தால் தட்டி கழிக்கின்றோம்.

நாம் வேகமாக, மிகவும் வேகமாக ஓடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நாம் ஏன் ஓடுகின்றோம்? எங்கு ஓடுகின்றோம் ?எதற்காக ஓடுகின்றோம் ? என்று சிந்திக்காமலே ஓடுகின்றோம் என்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

நமது முன்னோர்கள் வாழ்கையை பயணமாக பார்த்தார்கள் மற்றும் பயணித்தார்கள். நாம் இன்று வாழ்கையை ஓட்டமா கருதி ஓடி கொண்டிருக்கிறோம்.

தேவைகளும் தேடல்களும் மின்னலும் இடியும் போன்றதே.
தேவை என்பது தேவையாய் இருக்கும் வரை பிரச்சனைகளுக்கு இடமில்லை.
தேவைகள் என்று அடிப்படைகளாக மாறுகிறதோ அன்று தான் தட்டுப்பாடு நம்மை தடம் மாற வைக்கின்றது.

எழுதியவர் : ரமேஷ் ஏகாம்பரம் (26-Oct-14, 7:04 pm)
பார்வை : 315

மேலே