+கற்கண்டு எனக்கு நீ+

உனைப் பார்த்தால் கற்கண்டு எனக்கு நீ
எனைப் பார்த்தால் கல் கண்டு எடுத்தாய் நீ

நியாயம் கேட்க வந்தவனுக்கு
காயம் தரலாமா?

ஆயிதமில்லா சின்னவனிடம்
ஆவேசப் படலாமா?

நான் வேசம் சூடவில்லை
பாசம் சூடினேன்

வேகம் காட்டவில்லை
விவேகம் காட்டினேன்

சிரத்தை எடுத்து என்னை கொஞ்சம் சிந்தி...
எடுத்த கல்லை போட்டுவிட்டு மட்டுமே எனை சந்தி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Oct-14, 9:10 pm)
பார்வை : 367

மேலே