சில வினாடிகள்

நினைவலைகளின் நீர்த்திவலைகளாக
நெட்டி முறிக்கும்
நிமிடங்களின் நிஜம்
என்னவோ சில
நொடிப்பொழுதுகளே.....

கண்ணாடி மை
விரித்த அரும்பு
மீசையின் அரைநொடி
பெருமை.....

"அவள் உன்னதான்ட
பாக்குறா " ' இல்லடா '
காலர் தூக்கி
கண் தேங்கிய
வினாடி....

கட்டபொம்மன் வரிகளை
ஒத்திகை பார்த்து
காதல் சொல்ல
" ததது அது தப "
என தாளம் போட்ட
வெத்து வினாடிகள் ....

காதலியின் கரம்
கோர்த்த கன்னி
வினாடிகள்...

முகம் ஏந்தும்
வெட்க வினாடிகள்...

இமை மூடிய
மச்ச வினாடிகள்...

கண்ணம் தோய்ந்த
ஈர வினாடிகள்...

இதழ் தேடிய
எச்ச வினாடிகள்...

இடம் சேர்ந்த
உச்ச வினாடிகள்...

நீண்டு கொண்டே
செல்லும் இந்த
ராத்திரிகளின் ரகசிய
வினாடிகள்.....

மிச்ச வினாடிகள்
கோர்வைக்கு காத்திருக்கும்
அர்த்த வினாடிகள்.....

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (28-Oct-14, 11:54 am)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
Tanglish : sila vinaadikal
பார்வை : 82

மேலே