நீயின்றி நானில்லை

எத்தனையோ இருந்தாலும்
வானத்து நட்சத்திரங்கள்
வழிகாட்ட வருவதில்லை..
எவ்வளவுதான் இருந்தாலும்
ஆழ் கடல் நீர்
தாகம் தணிப்பதில்லை..!
வெண்மையாக இருந்தாலும்
வெற்றிலை சுண்ணாம்பு
உணவாக மாறுவதில்லை!
எத்தனைதான் எதிர்ப்பென்றாலும்
என் காதல்
அழியப் போவதில்லை !
கனிரசமே ஆனாலும்
இன்னொருத்தி உனையன்றி
என் வாழ்வில் இல்லை!