உணர்வுகளின் ஊர்வலம்
எழு நடைப்போடு உணர்வுகளின் ஊர்வலமாம்...
எதற்கென்று என்னை பெற்றெடுத்தாய் யென
நூட்கும் காவியமாம்..
முதல் நபர் ..
யாரென்று அறியாது நீ இருந்தாய்
நீ யாரென அறிய நான் தவம் கிடந்தேன்
நீ பிறந்தாய்..
இரண்டாம் நபர்..
என்ன பயணுண்டு
பெண்ணிடம்
கல்வி பயில
யென எண்ண
நீ பிறந்து கற்றாய்
என்னிடம்....
மூன்றாம் நபர்...
யாரென நான் அறிய
நீர் ஊற்றி தாகம் தீர்த்தவன் நீதானே - உடம்பு
யென உணர்ந்து கற்க
நீ பிறந்தாய் தொகுதியின் ஒருவனாக...
நான்காம் நபர்..
என் ஆசை நிறைவேற நீ பிறந்தாய்
நினைவிலும் நிலையாதிருக்க...
ஐந்தாம் நபர்...
கடமையில் ஒருவனாக நான் இருக்க
முடைமை வழி நீ பிறந்தாய்...
ஆறாம் நபர்...
நிலையூன்றி நான் இருக்க நீ காண
சில காலம் முதுமை வரவேற்கும் கரைசேர்க்க
அன்று நான் திடமிழந்த ஒருவனாக
உணவூட்டி என்னை பலப்படுத்தி கரைச்சேர்ப்பாய் யென
நான் நினைக்க நீ பிறந்தாய் ...
ஏலாம் நபர்..
ஆண்ட உடல் அணைந்த
பிறகு
பாதுகாப்பு நான் தேட
காவலொருவன் நீ பிறந்தாய்...
முகவரி..
பா . புகழேந்திரன் ,
ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,
பூண்டி,
தஞ்சாவூர் .