சிருஷ்டி

அமாவாசை
இரவில்
ஒளியிழந்து
ஒளிந்துக்கொண்ட
நிலவுதானோ............?
ஊதைக்காற்றில்
உயிரிழந்து
பறந்து போன
இலை
சருகுதானோ..............?
வறல்
நிலத்தில்
நீரிழந்து
வற்றிப்போன
சுவடுதானோ..................?
துருவ
விட்டத்தில்
சூடிழந்து
இறுகிப்போன
பனித்துளிதானோ...........?
மலை
இடுக்கில்
மாட்டிக்கொண்டு
எதிரொலிக்காத
சப்தம்தானோ.................?
கங்குல்
இரவில்
சக்தியிழந்த
ஞாயிற்று
கற்றைதானோ...............?
இவையனைத்தும்
சல்லடை
கண் கொண்டாலும்
தெரியாத
சிவனின்
சிருஷ்டிதானோ............?