எங்கே போகிறோம் நாம்

இரை தேடும் கண்
கேட்க மறுத்த காது
பசி மறந்த வயிறு
யார் உணவு
யார் வாயில்
பசித்திருந்தால்
கனவுகள் கை வரும்
பசி மறந்ததினால்
நிஜங்கள் தொலைக்கப்படவில்லை
கனவுகளில்
பயிர் வாடக்
காணச் சகியாத
உழுதவன் வாழ்வின் முடிவு
அரை முழக் கயிற்றில்
கலாச்சாரம் பண்பாடு
விற்று அயல்நாட்டு
நாகரீகம் இறக்குமதி
சமத்துவம் இங்குண்டு
சாதி மத பேதத்தில்
போர்க்கால எச்சரிக்கை
பொய்த்ததில் பொழிந்த
வெடிகுண்டு மழையில்
விளைந்தவை அவசரவாதமும்
அழிவின் இலக்கணமும்
அறுவடை செய்யப்பட்டன
கற்பும் பேரழிவும்
எட்டிப் பார்த்தாலும்
இளைத்தவன் கண்களுக்கு
விருந்தாவதில்லை தங்க நிலவு
விட்டு விலகிய
எண்ணங்களில் மிதந்திடும்
வக்கிரங்கள்
உயரப் பறந்தாலும்
தலை தட்டிடும்
கதவில் ஒட்டிய
மிச்சத் துளிகள்
கனவின் எச்சமாய்
சாக சாகத்
தீர்வதே இல்லை
இறப்பின் பிறப்பு
மரணத்தின் கணக்கில்!!
A.KARTHIKA ,
first year M.E -Applied Electronics.