குறிஞ்சிப் பூ

தினமும்
உன்னை காண..
வேண்டுமென்றே..
நீ வரும் சாலையின்
எதிர்திசையில் இருந்து வந்து
உன்னை ..
கடக்கிறேன் ..
நீ என்னை பார்த்ததும்
உலகம் என் கை வசப் பட்டதாக..
குளிர்கிறேன்..
உச்சி வெயிலிலும்!..
தினமும்!
உன் ஒரு பார்வைக்கு
தினமும்
நான் கடந்து வரும் தூரமோ
பன்னிரண்டு கிலோ மீட்டர்..
பார்வை படும் நேரமோ
ஒரு வினாடி!
குறிஞ்சிப் பூ போல!