மறந்துப்போன மாலைப்பொழுது

ஓங்கி அடித்தான்
மணி கதறி அழுதது
மனதில் ஒரே மகிழ்ச்சி...
ஓடினேன் விட்டிற்கு
புத்தகப்பையைத் தூக்கிலிட்டேன்....
தப்ப முயன்றேன்
கிடைத்தது தண்டனை அம்மாவிடம்
கோப்பையில் குளம்பியாக...!!!
விடுதலை வந்தது
வாய்க்குள் வடிநீர் வடிந்தபின்.....!!!
ஓடினேன் தெருவிற்கு நண்பர்களை தேடி
கண்டேன் அவர்களை
ஆடவில்லை,பாடவில்லை,விளையாடினேன்
அங்கே விளையாட்டுகள் ஏராளம்....
ஆணும் பெண்ணும் சமம் - இங்கே
பத்து வயது வரை மட்டும்.....
அம்மாவின் வாய் ஓலிபரப்பியது என் பெயரை
ஓடினேன் விட்டிற்கு
முகம் சிவந்தது அம்மாவுக்கு
என் சட்டையில் அழுக்கை கண்டு....
துவைத்து எடுத்தார்கள்???
முதலில் என்னை பின் சட்டையை.....
அழுதுகொண்டே விட்டுப்பாடம் முடிந்தது
விடிந்தது மீண்டும் சென்றேன் பள்ளிக்கு
காத்திருந்தேன் மீண்டும் அந்த மாலைப்பொழுது வரும் வரை.....!!!!!

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (5-Nov-14, 3:34 pm)
பார்வை : 208

மேலே