அவளின் அவர் 2

2
இதுவரை.....(அதிகாலையின் எந்த சப்தம் இன்றி பொழுது விடியும் நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கெள்சல்யாவின் முதலிரவினை அன்று அவர் எழுதி அளித்த சேகுவாரா பற்றிய கவிதையும் என சில சங்கதிகளை நினைவூட்டியது..அவளின் அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.)


==========இனி.............,

"ஆமா...என்னை நீங்க என்ன 'ங்க "போட்டு பேசரீங்க ' என்றாள்

"ஏன்...கூப்பிட்டா என்ன..? என்னை மாதிரியே நீங்களும் ஒரு மனித இனம் தானே...."

'இருந்தாலும் நான் பெண்...நீங்க ஆண்.."

"ஓர் உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆணை விட பெண்ணின் வலிமைக்கு பெண்மையும் பிள்ளைப் பேறும் போதுமே... "

'இதுவரை யாரும் இப்படி கூப்பிட்டதா எனக்கு தெரியாது..'

'இல்லிங்க..பெரியார் சொல்லியிருக்கிறார்..பெண்ணடிமை அழிய முதலில் மனைவி மரியாதையுடன் அழைக்கப்படுதல் வேண்டும்..வாடி ..போடி என்பதெல்லாம் பார்ப்பனியம் மட்டுமல்ல மனித அடிமைத்தனம் ஆகும்.'

'நீங்க என்னை 'ங்க' போட்டு அழைப்பது நம் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறதே.. எனக்கு என்னமோ போல உள்ளதுங்க...'

'பழக பழக சரியாகிடுங்க..நாம் கணவன் மனைவி என்றில்லாமல் நல்ல நண்பர்களாய் இருப்போமே....சரியாங்க..'

;நண்பர்களாய் என்றால்...?
“ நண்பன் என்றால்..நட்பு என்றாலென்ன தெரியுமாங்க..?சொல்லட்டுமாங்க..”-அவர் சொன்னார் அவளுக்கு இப்படி…
யோசிக்காமல் நேசிப்பது
நட்பில் மட்டும்தான் -
நேசித்ததை யோசிக்காமல் ,
பாசம் பூசி இ(ற)ருக்கும்வரை
காப்பதும் நட்பில் மட்டுமே!
வயதுரேகையால் வளைக்கப்பட்ட
பூகோள உருண்டை அல்ல நட்பு!
நாலு வேலிக்குள் நட்டுவைத்த
பூமரம் அல்ல நட்பு -
இ(எ)ன்றும் உயிர்த்தெழும் போனிக்ஸ் அது!!
வேரின் ஆழம்
மரத்தின் பலம்
வளம்....

மரத்தின் பரப்பு
பறவைகளுக்கு தாப்பு ***
காப்பு....

பூக்களின் வண்ணம்
தேனீக்களின் ஈர்ப்பு
சேமிப்பு...

தோழா...
உன் மனதின் நம்பிக்கை
உன் வாழ்வின் மலர்ச்சி
வளர்ச்சி...

நம்பிக்கை ஓர் ஆய்வுக்கூடமல்ல
அவ்வப்போது
சோதனை மேற்கொள்ள..

இறக்கையின் விரிப்பில்
நம்பிக்கைக் கொண்டே
நீந்துகிறது வானில்
பறவைக்கூட்டம்...

கீழ் மண் தன்னை ஏற்குமென்றே
வீழ்கிறது தரையில் உயிர்த்துளி
மழையாய்...

உயர முடியுமென்று நம்பியே
விதை வெளி வளர்கிறது
செடியாய் மேலெழுந்து....

தோல்வியும்
வீழ்தலும்
எழுதலுக்கான பயிற்சியே..
நம்பி கை வை...
நம்பிக்கை வை ....

நாளைய விடியலில்
நலமாக இருப்பாய்
நீயும்.!

அன்றியும் நடிப்பின்றி நட்போடு..!!
நல்ல இல்லறத்தில் நட்பு இருப்பின் அங்கு மகிழ்ச்சி இருக்குங்க..நம்ம வாழ்வில் நட்பு மலரட்டுங்க…..நாம் இனி நல்ல நண்பர்கள்…இனி இருவரும் ஒருவரை ஒருவர் தோழர் என கூப்பிட்டுக் கொள்வோம்..சரியா தோழர் கெளசல்யா….?’

‘என்னது கெளசல்யாவா…எனது பெயர் கனகா …என்னைப் போய் கெளசல்யா என்று..’ இழுத்தாள்
‘இல்லீங்க..இந்த சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் எனக்கு மிகுந்த பிரியம்..முழுமையாக சொல்வேன்.அந்த ஒலி அதிர்வு என்னுள் எப்பொதும்..உண்டுங்க..’
‘ என்ன இது குழப்பமா இருக்கு..ஒரு பக்கம் சேகுவாரா…மறுபக்கம் பெரியார்…இப்பொ சுப்ரபாதம்…எப்படிங்க..?
;தோழர்.எந்த ஒலியும் ஒரு வித குறிப்பிட்ட அதிர்வலையில் அதிர்வுகளை உண்டாக்கும்..அது நம்முள் துள்ளல்களை அளிக்கும்..அதனால் புத்துணர்ச்சியும் வரும்..இன்குலாப் ஜிந்தாபாத்….அரோகரா..சுவாமியெ அய்யப்பா….கோவிந்தா…பூண்டுமா பூண்டு..நல்ல பூண்டு.வெள்ளைப்பூண்டு..கீரை கீரயேய்..என எந்த ஒலியும் விதிவிலக்கு அல்ல..எனக்கு இன்குலாப் ஜிந்தாபாத் எழுப்பும் அதிர்வலைகள் இந்த கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா-வும் எழுப்பும் பொழுது என்னால் மறுதலிக்காமல் இருக்க இயல்வதில்லையெ..எனது வாழ்வின் நொடி தோறும் இனி அந்த அதிர்வுகள் உயிரோட்டமாய் இருக்க வேண்டியே உங்களை இனி கெளசல்யா என அழைப்பேன்..சரியா தோழர் கெளசல்யா?”
விழிகள் விரிந்து வியப்பில் நின்றவள்..அவரை இறுக கட்டிக் கொண்டாள்..
கன்னதில் கன்னம் உரசியது…
அவரின் தாடி குத்தியது..”ஆமாம் இந்த தாடி ……” ..என்று இழுத்தவளுக்கு இதழ்களால் அவர் தாழ்ப்பாள் போட்டார்….
அங்கு அமானுஷ்ய அமைதி ..
அந்த அமைதியையும் அவளின் இன்பத்தையும் அவரின் இந்த வார்த்தைகள் அழித்துப் போட்டன..
“தோழர் கெளசல்யா ..எனக்கு ஏற்கனவெ இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பதை மறைக்க விரும்பவில்லை ”

(அவர் எழுந்திருப்பார் )

எழுதியவர் : அகன் (7-Nov-14, 10:11 pm)
பார்வை : 148

மேலே