எதிர் மறை

அன்பை முறி
ஆறறிவு தவிர்
இனிமை வெறு
ஈவது கெடு
உன்னால் முடியாது
ஊருடன் சேராதே
எதற்கும் எதிர்
ஏளனம் செய்
ஐந்தில் வளையாதே
ஒதுங்கியே இரு
ஓய்வில் மகிழ்
ஔவை கேளாதே
அஃதே அழிவு
---- முரளி

எழுதியவர் : முரளி (8-Nov-14, 9:48 am)
Tanglish : ethir marai
பார்வை : 234

மேலே