பாலைவன பூக்கள் 1

கருகுழல் மயிர்கொண்ட பெண்ணே
என் கண்கள் இருளுதடி கண்ணே..,
காந்தார கண் கொண்ட பெண்ணே
என் நினைவுகளை திருப்பிதருமடி கண்ணே..,
சிங்கார இமை கொண்ட பெண்ணே
என் மனம் அதில் சிக்கி தவிக்குதடி கண்ணே..,
செந்தளிர் கன்னம் கொண்ட பெண்ணே
என் செந்தமிழ் சகுதடி கண்ணே..,
பூசிரிப்பு செய்யும் பெண்ணே
எந்தன் பூஉயிர் போகுதடி கண்ணே ..,
கொண்டை ஊசிஇடை கொண்ட பெண்ணே
இதைகாண இருகண்கள் போதாதடி கண்ணே..,
ரோஜா பூபதம் கொண்ட பெண்ணே
இதைகண்டு இப்புவி தவம் செய்ய கண்டான்..,
உன் பிறப்பை கண்டு
என் மனம் உன்பின்னால் வருதடி கண்ணே..,