பிணத்தின் குமுறல்

கடைசிக்குளியலை
காட்சிப்படுத்தி
கண்காட்சிபீடம்
ஆக்காதீர்கள்

ஆவி பிரிந்த பின்
எதற்கு அம்மணம்
ஆடையுடன்
குளிப்பாட்டுங்கள்

கோடித்துணியால்
கொஞ்சம் மேனியை
போர்த்துங்கள்
தியாகி உடலில்
தேசிய கொடியாய் அல்ல
தேகத்தை மறைக்கும்
சின்ன துணியை

நடுவீதியில் விபத்தென்றால்
விலகிவிட்ட ஆடைகளை
வேடிக்கை இன்றி
சீர் செய்யுங்கள்

முடியும் என்றால்
உங்கள் மேல் துண்டால்
எங்கள் மேனி மறையுங்கள்
செத்தவருக்கு பொன்னாடை போட்ட
புண்ணியவான் நீங்களாவீர்

தயவு செய்து ஊடகமே
தரம்கெட்ட செயலை செய்யாதே
மறைக்க வேண்டிய
மர்ம இடங்களை
அம்புக்குறி இட்டு காட்டாதே

வாழும் போது மதிக்கவில்லை
மரணத்தின் பின் மதிப்பேது
சொல்வதெல்லாம் ஒன்றே தான்
பிணங்களுக்கும் மானம் உண்டு ...
புரிந்து கொண்டால் எல்லாம் நன்று ....!!.

எழுதியவர் : கயல்விழி (11-Nov-14, 9:18 am)
பார்வை : 107

மேலே