திரை கதை வசனம்
பழங் கதை ஒன்று சொன்னேன்
வசனம் எதுவுமில்லாமல்......
வசனம் எழுதிப் பழகினேன்
வார்த்தைகள் கிடைக்காமல் ....
வார்த்தைகள் தேடித் பார்க்கிறேன்
உரையாடல் எதுவுமில்லாமல்....
உரையாடல் செதுக்க நினைத்தேன்
உரைப்பவர்களில்லாமல் ....
உரைப்பவர்களை நியமித்தேன்
பாடல் வரிகளில்லாமல் ...
பாடல் வரிகள் அமைக்க நினைத்தேன்
பாடகர்களில்லாமல் ....
பாடகர்களை அழைத்தேன்
பாடல்களில்லாமல் ....
பாடல்கள் எழுத நினைத்தேன்
எனை ஏசின கவிதைகள் .....
கவிதைகள் வடித்தேன்
எழுதுகோளில்லாமல்...
எழுதுகோலை எடுத்தேன்
காகிதங்கள் என்னை முறைத்துப் பார்த்தன...
காகிதங்களை மடியில் அணைத்தேன்
என்னை முறைத்துப் பார்த்து ...
அய்யோ! ...''நீ நடித்தது போதும் (திரை )
என்னை விட்டுவிடு'' என்று நகைத்தன....