அழகில்லா நினைவுகள்

ஆழ் கடலொன்றின்
எதிர்ப்பில்
வானம் கொத்திய
இரவு காத்ததெல்லாம்
நட்சத்திரமீன்களாய்
மனதோடு தத்தளிக்க ,
மசியாத தொலைவில்
பனிப்பூக்கள் கொண்டாடும்
நள்ளிரவு நாக்கில்
விடியும் நொடிகளின் நீளம்...

கறை படிந்த
உறவொன்றின்
காரியம் முடிந்ததாய்
சந்தேக நிறத்தில்
எஞ்சிக் கிடந்தது
நம்பிக்கைச் சூடு கண்ட
சாம்பல்....

யாதுமற்ற
அந்திம நேர்கோட்டில்
காலத்தின்
கணக்கெடுப்பில்
தகவலற்ற உறவாய்க்
கனத்திருக்கும்
சிதைந்த பக்கத்தில்
புதைந்த பிரிவொன்று
நெளிகின்ற புழுக்களாய்....!

எழுதியவர் : புலமி (13-Nov-14, 12:29 am)
பார்வை : 130

மேலே