எழுத்தெனும் என் தோழன் -கயல்விழி

இழப்புகளின் வடுக்கள்
பிரிவுகளின் துயரென
தொடர்ந்த போது
சோகமே என் சொந்தமாகியது .

இலக்கில்லா தேடல்
வெறுப்பான வாழ்க்கையென
இதயம் ரணமாகியது .

விழிகள் குளமாகி
இதழ்கள் மௌனமாகி
வேதனை மட்டுமே உறவாகியது.

திசை மறந்த பறவை போல்
செய்வதறியா
திகைத்து நின்றேன் ..

எங்கிருந்தோ வந்தான்
எழுத்தெனும் தோழன்
இணைந்து கொண்டேன் அவனோடு
நானும்

மகிழ்ந்தேன் அவன் வரவில்
பறந்தேன் வான்வெளியில்

என் கிறுக்கல்கள்
கவியானது
மன வலிகளுக்கு
மருந்தானது

மனதினில் மகிழ்வை
தந்ததினால்
மறவேன் என்றும் நான்
அவனை ....


**நன்றிகளுடன் கயல்**

எழுதியவர் : கயல்விழி (18-Nov-14, 3:16 pm)
பார்வை : 106

மேலே