கருவை திருடு கவிதையை திருடாதே

உன்கவி நான் வாசித்தால்
அறிவு செறியும்
என்கவி நீ வாசித்தால்
கருப்பொருள் உனக்குதவும்

கருவொன்றே....
அவரவர் நடையில் அழகாகும்
சந்தமுடன் பதிக்கும் கவி
சந்தனமாய் மணக்கும் ...

சொல்லாடல் தனிச்சிறப்பு
பலர் உதடுகள் அசைவில்
தனித்துவமாய் சிறக்கும்
படைப்பாளிக்கு அதுவே பெருமை !

யார் பெற்ற பிள்ளைக்கு
யார் வைப்பது செல்லபேர்
யாவரும் வைத்தாலும்
தாய் வைத்த பெயரே நிலைக்கும்

ஒவ்வொரு தருணத்தில் - தன்னிலை
ஒவ்வொன்றாய் மறந்து
மனதின் ஆழம் சென்று மாய்கிறான்
கவி வரியை உருவாக்கும் கவிஞன் !

கவித்திருடா ....
உனக்குள்ளும் ஒளிந்திருக்கும் கற்பனை
உள் நுழையாதிருக்கும் உந்தன் ஒப்பனை
உனக்குள் கருவாகி உருவாகினால் அது பெருமை
உள்ளத்தை கொன்று பெயர்வாங்குவதில் ஏது பெருமை !

எழுதியவர் : கனகரத்தினம் (20-Nov-14, 8:27 am)
பார்வை : 172

மேலே