உனக்காக ஒரு வெண்பா - ரகு

சோலைதனித் திருக்கத் தென்றல் கமழ்ந்திருக்க
மாலை படர்ந்தங்கே மௌனித்த -வேளையொரு
தேடியபூ கிடைக்கத் தழுவியத் தும்பியென
வாடியபோதுநீ வந்தா யடி!

தெள்ளிய நினைவுகளில் திளைத்த அகமதனிற்
துள்ளியத் தாரகையேத் தழுவும் - மெல்லிய
இசை யமுதே இன்சொற் சுவையே வுன்
திசைபார்த்தே யிருக்குமென் கண் !

சிந்தைகுளிரு தற்கும் சிறகுகள் விரியுதற்கும்
எந்தன் கனவுகளில் இனிமை தருகுதற்கும்-விந்தை
உலகினோடு விரும்பி வாழுதற்கு மென்றும்
விலகாதிருத்தல் வேண்டும் நீ !

போது மெனுமளவு பொழுதுமு டனிருப்பேன்
யாது கேட்பினினும் இனித ருள்ந்திருப்பேன் -மாது உன்
காதலொன்றே யென் காலமும் வாழ்வினொடு
மோதல் தவிர்க்கவல்ல சொல் !

எத்தனைப் பெண்டிர் கண்டே னிவ்வுலகில்
சித்திரையுந்தன் சிறகொன்றே யென்னைப் - பத்திரப்
படுத்துமென்றே பெருந்தவப்பிறப்பில் தூது
விடுத்துக் காத்திருக்கிறேன் நான்!

எழுதியவர் : அ.ரகு (22-Nov-14, 7:18 pm)
பார்வை : 138

மேலே