முன்னறி தெய்வம்

பள்ளியில்..
அடி வாங்கி
சிவந்திருந்தது..
பையனின் கைகள்..
தெய்வம் இல்லையென்று
சொன்னதற்காக..
அவனுக்கு
அன்னையும் பிதாவும்
இல்லையென்று
நினைத்து
சொன்னதற்காக ..!
அழுது சிவந்தது
குடிசையில் இருந்த
அக்காவின் கண்கள்!

எழுதியவர் : கருணா (24-Nov-14, 10:32 am)
பார்வை : 123

மேலே