அன்புள்ள அம்மா
என் வாழ்வின் அழகிய
"தருணங்கள்"
அனைத்துமே _நீ
நீ மட்டுமே....!
உன் கைக்கோர்த்து
நடக்கையில்
தோள் சாய்ந்து
அழுகையில்
பாசத்தை அள்ளி
தருகையில்...!
கண்டிப்புடன் தவறுகளை
திருத்துகையில்
அனைத்து
"தருணங்களிலும்"
தாயாய்,
தந்தையாய்,
மகளாய்,
தோழியாய்
என்னில் எல்லாமாய்...
"அன்புள்ள அம்மா"
உன்னை வர்ணிக்க
என்னிடம் வார்த்தைகள்
ஏதும் இல்லை....!
என் வர்ணனை நீயாக
இருப்பதினால்
இருந்தும் வார்த்தைகள்
தேடுகிறேன்
உன்னோடு இருந்த
அந்த அழகிய
"தருணங்களை"
வர்ணிக்க.....!