மந்திரக்காடு

மனசு ஒரு
மந்திரக்காடு

அதில் தொலைந்த
உன்னை தேடு

அடர்ந்து கிடக்கும்
சந்தோஷத்தில்
புதைந்து கிடக்கும்
உன்னை தேடு

நெடிதுயர்ந்து நிற்கும்
துக்ககாட்டில்
சல்லடை போட்டு
உன்னை தேடு

சில புயல்கள்
சின்ன மழைகள்
சில நேரம் சூறாவளி
சில நேரம் தழுவும் தென்றல்

பல அமானுசியங்கள்
கலந்த மனசு
யாரும் வழி
கண்டறியா மந்திரகாடு

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (2-Dec-14, 5:37 pm)
பார்வை : 87

மேலே