நீ தங்கமோ

உன்னைக்காணும் போது
உள்ளத்தில் காதல் கொடி
உயரத்தில் ஏறிப்பறக்கிறது ...

உன்னைக்காணாத போது
உள்ளத்தில் காதல் கொடி
இறங்கி வந்து விடுகிறது ...

இப்படி .
ஏறுமுகமாய்
இறங்குமுகமாய்
இருப்பதற்குக் காரணம் ...

நீ -
தங்கமாய்
இருப்பதால்தானோ !

எழுதியவர் : மா. அருள்நம்பி (2-Dec-14, 9:45 pm)
Tanglish : nee thankamo
பார்வை : 93

மேலே