விடை தெரியாத காதல்
கடவு சீட்டு
கையில் எடுத்து
கடல் தாண்டி
வந்தேன் இங்கே.
காதலியை காத்திருக்க
சொல்லி விட்டு.
காசு பணம் சம்பாரிக்க
கஷ்ட பட்டு சம்பாரித்த.
காசு பணத்தை..வங்கி
கணக்கில் சேர்த்து
வைத்து..உள்ளத்தில்
ஆசை வைத்து.
காதலியை கரம் பிடிக்க..
கணக்கு போட்டு
தாயகம் சென்றேன். நான்.
அவளும் காத்திருந்தாள்.
நிறை மாத கர்ப்பிணியாய்.
பிரசவ தேதியை எதிர் நோக்கி...
என் கணக்குக்கு விடை
தெரியாமல் காத்திருந்தது...