மனமே மனமே

மனப்பொழுதின் நொடிமுள்ளே
கணப்பொழுதேனும் நீ நில்லேன்!
முடியாதென்று நீ தீர்மானித்து
முயலாத காரியங்கள்
பயிலாத பாடங்கள்
முடித்திட முடிவெடுத்து
புதுத்தொடர் துளிர்த்திட
மனப்பொழுதின் நொடிமுள்ளே
கணப்பொழுதேனும் நீ நில்லேன்!
சிக்கலிலும் சறுக்களிலும்
சிக்குண்டு சுக்குநூறாய்
அக்கு வேறு ஆணிவேறாய்
ஆனபோதும் விட்டிடாத
உன் எண்ண வண்ணங்களை
நிறுத்தி
மனப்பொழுதின் நொடிமுள்ளே
கணப்பொழுதேனும் நீ நில்லேன்!
செக்கிழுக்கும் மாடுபோல
உன்னையே சுற்றி சுற்றி
வரச் செய்து விட்டாய்!
சொக்குபொடி போட்டுவிட்டாய் -மூளைக்கு!
உன் வழியில் எந்திரனாய்
இயங்குதே மயங்கியே...!
ஓஹோ...இதுதான் மூளைச்சலவையோ..?
மாறுகின்ற பருவநிலைபோல்
நீயும் கொஞ்சம் மாறிவிடேன்!
ஆசுவாசம் நானும் கொண்டு
அமைதி பெற்று அழகடைந்து
என் வாழ்க்கை ஓடமது
தள்ளாட்டமின்றியே தளம்
சென்று சேர்ந்திட....
மனப்பொழுதின் நொடிமுள்ளே
கணப்பொழுதேனும் நீ நில்லேன்!