கலையாத நினைவுகளில்

காற்றாய் வந்தாள்
சுவாசித்து கொண்டேன்

கண்களில் உறவாடினாள்
காதல்தனை கொண்டேன்

காணவில்லை என் இதயத்தை
அவள் காலடியில் கண்டேன்

காலங்களை மறந்து பல
கவிதைகளை கண்டேன்

ஏனோ,

கானலாய் மறைந்த - அவளை
காற்றாய் மாறி தேடினேன்

என்னவளே கேள்
இதோ இன்றும் தொடர்கிறது

உன் கலையாத நினைவுகளில்
என் தனிமை பயணங்கள்...

எழுதியவர் : நூருல்லாஹ் J (10-Dec-14, 12:51 pm)
பார்வை : 125

மேலே