எப்போதும் என்னோடு
விளக்காக நீ வரவேண்டும்..
எனக்காக உனைத் தரவேண்டும் !
பிணக்கில்லா வாழ்வை நீ காண..
கணக்கில்லா இன்பம் நான் காண!
விளக்காக நீ வரவேண்டும் ..
எனக்காக உனைத் தரவேண்டும்!
பனித்துளியாய் நான் மாற வேண்டும்
இளங்காலை உன்னால் கரைவதற்கே!
அல்லி மலராக நீ ஆக வேண்டும்
ஒரு சந்திரன் எனைக்கண்டு மலர்வதற்கே!
பெண்ணே நீ எப்போதும் என் நெஞ்சுக்கூட்டில்
இளைப்பாறி போய்விடாமல் நிலைக்க வேண்டும்!