கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு குண்டுகள் மத்திய அரசு அறிவிப்பு

இப்பொழுதெல்லாம் அதிகாலைப் பொழுது அணுவாற்றல் பற்றிய ஏதோ ஒரு செய்தியோடுதான் ஆரம்பிக்கிறது. அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் விடுக்கும் அறிக்கைகள் பத்திரிக்கைகளை அலங்கரிகின்றன. அப்படி பத்திரிக்கைகளில் சமீபமாக அலங்கரித்த செய்திதான் கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகளை நிறுவ மத்திய அரசு ரஷ்ய அதிபர் புத்தினுடன் கையெழுத்திட்டுருக்கும் புதிய ஒப்பந்தம்.

ஏற்கனவே கூடங்குளத்தில் பல கோடிக்கணக்கான ருபாய் செலவீட்டில் நிறுவிய அணு உலைகளில் இருந்து இன்னும் தமிழகதிற்கு தேவையான ஒரு சதவிகிதம் கூட உற்பத்தி செய்யவில்லை.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தினமும் அங்கு விபத்துக்கள் நிகழ்த்து வருபதாக செய்திகள் வருகின்றன. கூடங்குளம் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறை, தினமும் நடக்கும் போராட்டங்களை அதிக அளவில் ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை.

முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரசை விட நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று பாஜக அரசியல்வாதிகள் அப்பட்டமாக பொய்களை பேச ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் நன்றாக செயல்பட்டுவருகிறது என்று அள்ளி வீசுகிறார்கள், அரசியல்வாதிகளை நம்ப முடியாது! முதிர்ந்த அறிவியலறிஞர்கள் மக்களுக்குப் புரியாதவாறு பூசி மெலுகுவதில் விற்பன்னர்கள். அவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது.

இப்படி இருக்க தமிழத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகள் இந்த விசயத்தில் வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகின்றன.

உலா அளவில் அணுமின் நிலையத்தின் ஆபத்தினை உணர்த்து அரசாங்கங்கள் இயங்கி வரும் அணுஉலைகளை மூடிக்கொண்டு வருகின்றன. ஆனால் மக்கள் விரோத போக்குடைய பாஜக அரசாங்கம் அணுமின் உற்பத்தியை அதிகரிக்க கையெழுத்திட்டுள்ளது.

மனித நேயமிக்க ஒவ்வொருவரும் கூடங்குளத்தில் அணுமின் நிலையங்கள் கட்டப்படுவதற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப வேண்டும். தமிழ் மண்ணில் மக்களை பலிவாங்கவிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்த்து போராட முன்வரவேண்டும்.

எழுதியவர் : முஹமது ரபிக் (13-Dec-14, 4:34 pm)
சேர்த்தது : Mohamed rafiq
பார்வை : 128

மேலே