விதைத்தவள் நீ என்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அடிப்படையில் என் அடிமனதில்
அச்சமென்பதே நிச்சயம் இல்லை
அச்சமென்பதை மிக துச்சமாக
கருதிவந்தேன் குறிப்பிட்ட கட்டம்வரை
உன் விரலின் வழியே வரையப்பட்ட
வரிகள், அது என் விழிகளுக்கு கிட்டும்வரை
அந்நாளில்
கவிதை என்பதே படிக்கத்தான் என
உத்தேசமாய் உத்தேசித்திருந்தேன்
பின்னாளில்
பொன்னாளாய், நன்னாளாய்
மின்னல் உன் வரிகளின் அறிமுகம்
உன் வரிகளின் அறிமுகத்திற்கு பிறகு
இந்நாளோ ,
கவிதை என்பது படைக்கத்தான் என
உணர்ந்து ,உணர்த்தி பதித்து வருகிறேன்
எந்நாளும் ,
என் வாழ்வில் கவிதை நிறைந்திருக்கும்
கவி விதை விதைத்தவள் நீ என்பதால் !