செய்ந்நன்றி யறிதல் 10 - இன்னிசை வெண்பா

காலத்தில் வந்தேதான் சாட்சியும் சொன்னாரே
ஞாலத்தில் நன்றிமிக கன்னியப்பா - காலத்தால்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 11:10

கருத்துரை:

எவ்வகைப்பட்ட பெரிய அறங்களை அழித்தவர்க்கும் அதனால் ஏற்படும் பாவத்திற்குப் பரிகாரம் உண்டு. ஆனால், தனக்கு ஒருவன் செய்த உபகாரத்தை மறந்தவனுக்கு, அப்பாவத்தை நீக்கிக் கொள்ள வழியில்லை.

அதற்கேற்ப, ஒருவன் செய்யாத குற்றத்திற்காக காவல் துறையில் அகப்பட்டு, நீதிமன்றம் சென்ற பொழுது, சம்பவம் நடந்த இடத்திலிருந்த இவரால் பயன் பெற்ற ஒரு நபர் வந்து இவர்க்கும், நடந்த குற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சரியான நேரத்தில் வந்து சாட்சியம் சொன்னார். நிரபராதி தண்டனையிலிருந்து தப்பினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-14, 3:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே