விந்தை உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
களவு போன காசுக்கு
கணக்கு பிள்ளை சம்பளம்!
இழவு வீட்டு சாப்பாட்டுக்கு
இல்லையே மொய் பணம்!
பிணம் தின்னும் காக்கைகள்
பித்ருக்கள் எனச் சோறு!
அழுத பிள்ளை பசியாலே
அடங்குதிங்கு கை சப்பி!
விந்தை உலகத்திலே
விளங்காத உண்மைகள் பல!!!