கண்ட நாள் முதலாய்

உன் முகம் கண்ட நாள் முதலாய் வானமிட்டு இறங்கி வந்த
தேவதையாய் உலாவருகிறாயடி என் கண்களில்!
வண்ணமிகு பட்டாம்பூச்சியாய் இதயமெனும்
கூட்டில் சிறகடித்து பறக்கிறாயடி!
என் நெஞ்சமெனும் சோலையிலே அனுதினமும்
கால்தடம் பதித்து ஓடிவிளையாடுகிறாயடி!
உன் சிரிப்பெனும் இசையால் அனுதினமும்
என் உடலெங்கும் இசை மீட்ட செய்கிறாயடி!
நினைவெல்லாம் நீயாய் மாறிப்போன
மாயையை எப்படி செய்தாயடி!
உனக்குள்ளும் என்னால் இத்தகு மாற்றங்கள்
நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று தெரியுமடி !எனக்கும்
நீயாவது சொல்லிவிடேன் நம் காதலை முன்மொழியத்தான்
இயலவில்லை வழிமொழிந்தாவது விடுகிறேன்!
என் காதலியே!