தாய் பெற்ற பரிசு
நான் படிக்கிறேன்
அம்மா
கேட்கிறாள் ,
நான் சிரிக்கிறேன்
அம்மா
ரசிக்கிறாள் ,
நான் அழுகிறேன்
அம்மா
துடிக்கிறாள் ,
நான் தூங்குகிறேன்
அம்மா
விழித்து இருக்கிறாள் ,
நான் வசதியாக இருக்கிறேன்
அம்மா
எனக்காக உழைக்கிறாள்,
நான் வென்று விட்டேன்
அம்மா
நிம்மதியாக என்னோடு இருக்கிறாள் .